INHERIT A BLESSING
“I will make your name great, and you will be a blessing.” Genesis12:2. Are you going through a difficult time today? Let this word bring you encouragement. We serve a God who exceeds our expectations. He desires to restore what was lost and make things even better than before. God wants to bless you so that, like Abraham, you can be a blessing to many. You have been called to inherit a blessing. Your days are destined to shine brighter because God is faithful to His Word. For Prayer-9176844644.
ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ளுங்கள்
“உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய்.” ஆதியாகமம்12:2. இன்று நீங்கள் ஒரு கடினமான காலகட்டத்தை கடந்து சென்று கொண்டிருக்கிறீர்களா? இந்த வார்த்தை உங்களுக்கு ஊக்கத்தை கொண்டு வரட்டும். நம்முடைய எதிர்பார்ப்புகளுக்கு மேலாகச் செய்யும் கர்த்தரை நாம் சேவிக்கிறோம். இழந்ததை மீட்டெடுக்கவும், முன்பை விட காரியங்களை இன்னும் சிறப்பாக மாற்றவும் அவர் விரும்புகிறார். ஆபிரகாமைப்போல, நீங்களும் பலருக்கு ஆசீர்வாதமாக இருக்க, கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்க விரும்புகிறார். நீங்கள் ஆசீர்வாதத்தை சுதந்தரித்துக் கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். கர்த்தர் தம்முடைய வார்த்தைக்கு உண்மையுள்ளவராய் இருப்பதனால், உங்கள் நாட்கள் பிரகாசமாக ஒளி வீசும்படியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஜெபத்திற்கு, இந்த எண்ணை (9176844644) அழைக்கவும்.